Balakrishna Reddy :அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரின் 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து!

சென்னை:1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, அ.தி.மு.க. ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மொத்தம் 108 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்துச் சென்னை எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இவ்வழக்கில், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு 2019-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தீர்ப்பளித்தது. மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், போலீஸ் விசாரணையில் குறைபாடுகள் உள்ளது. உண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை அரசுத்தரப்பு கண்டறியவில்லை. பலவீனமான ஆதாரங்களே உள்ளது. அடையாள அணிவகுப்பு நடத்தப்படவில்லை. எனவே, சிறப்பு கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *