Mukesh Ambani: மீண்டும் மீண்டும் கொலை மிரட்டல்!

முகேஷ் அம்பானிக்கு மீண்டும் மீண்டும் கொலை மிரட்டல்!

மும்பை: ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. இந்த முறை ரூ.400 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

ரிலையன்ஸ் குழும தலைவர் அம்பானிக்கு கடந்த வெள்ளிக்கிழமை(அக்.,27) ரூ.20 கோடி மிரட்டல் வந்தது. அடையாளம் தெரியாத நபர் அனுப்பிய மிரட்டல் இமெயில் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அடுத்த நாள் ரூ.200 கோடி கேட்டு மற்றொரு இமெயில் வந்தது.

இது குறித்தும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று( அக்.,30) அம்பானி நிறுவனத்திற்கு மற்றொரு இமெயில் வந்தது. அந்த இமெயிலில் ரூ.400 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *