
உலகத்திலேயே தனக்கென்று ஒரு விமானச் சேவை நிறுவனம் இல்லாத நாடு இந்தியா தான் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
சென்னை பரங்கிமலை கன்டோன்மென்டில் சிறு விளையாட்டரங்கம் கட்டுவதற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் குத்து விளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, திமுக நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், இலங்கை கூடத் தனக்கென்று விமானச் சேவை நிறுவனம் வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
தனக்கென்று ஒரு சொந்த விமானச் சேவை நிறுவனம் இல்லாத நாடு இந்தியா தான் என்று மத்திய அரசை விமர்சித்துப் பேசினார்.


