“சைலப்பன் சைக்கிள் மார்ட்” படத்தின் First Look வெளியீடு..!!

Advertisements

“சைலப்பன் சைக்கிள் மார்ட்” எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய சுகா தற்போது “சைலப்பன் சைக்கிள் மார்ட்” எனும் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார். இதில், இசக்கி கார்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுமையான காட்சியமைப்பில் வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை சினிமா ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *