Mansukh L. Mandaviya: 86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப அனுமதி!

86 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதி!

தமிழகத்தில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இதில் 15 சதவீதம் அதாவது 1650-க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகக் கலந்தாய்வை நடத்தி வரும் நிலையில், இன்னும் நிரப்பப்படாமல் 86 இடங்கள் உள்ளன. இதை வீணாமல் தடுக்கும் வகையில், இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய சுகாதாரத் துறைக்குக் கடிதம் எழுதி இருந்தது. மத்திய அரசு அனுமதி அளித்ததன் அடிப்படையில், கலந்தாய்வை மாநில அரசே நடத்துகிறது. காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதன்படி மத்திய இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (அக்.31) தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தகவலை மருத்துவ சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *