
இந்தியா, நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூரில், இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து, இன்றையப் போட்டியிலும் இந்திய அணி வெற்றிப் பெறுமா? என ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.


