இந்திய கூட்டாண்மை ஒட்டுமொத்த உலகிற்கும் உதவும் – மோடி அறிவிப்பு.!

இந்தியா, ஐரோப்பிய கூட்டாண்மை ஒட்டுமொத்த உலகிற்கும் உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ளது..

இதில் இந்தியாவிலிருந்து ஐரோப்பியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, ஆடைகள், கடல்சார் பொருட்கள், காலணிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு இறக்குமதி வரி அடியோடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில், இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல இருதரப்பு செழுமைக்கானப் புதிய வரைபடம் எனவும், இந்தியா, ஐரோப்பிய கூட்டாண்மை ஒட்டுமொத்த உலகிற்கும் உதவும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *