Advertisements

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாராளுமன்ற மேல்சபையில், எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.
அதன்படி அடுத்த மாதம் 19-ந்தேதி, மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்தநிலையில் தி.மு.க. மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. வழக்கறிஞர் வில்சன், ரொக்கையா மாலிக், எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மேல்சபை எம்.பி. சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என, அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
Advertisements





