
தவெக தலைவர் விஜய்யுடன் தேர்தலுக்கு முன்பு ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினேன் எனவும், இந்த வழக்கு எனக்கு கிடைத்த பரிசு எனவும், காலம் ஒருநாள் பதில் சொல்லும் தவெக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் பேசியதாக கைதான வழக்கில் கைதான திருநாவுக்கரசு கூறியுள்ளார்.
மேலும், இப்போது பேசினால் எனக்கும் என் குடும்பத்திற்கும்தான் பாதிப்பு, உரிய நேரத்தில் அனைத்தையும் சொல்வேன் எனவும் பேசியுள்ளார்.ரூ.35 கோடி குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள திருநாவுக்கரசு, ஜாமீன் நிபந்தனையின்படி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,” வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தற்போது முழுமையாக பேச விரும்பவில்லை. உரிய நேரத்தில் அனைத்து உண்மைகளையும் புட்டு புட்டு வைப்பேன். வெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இளையராஜாவிடம் தான் பேசியது உண்மை. ஆனால் ஒரு அரசியல் ஆய்வாளராக தரவுகளை சேகரிப்பதற்காகவே அவரை தொடர்பு கொண்டேன் தவிர இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாத என்று கூறியிருக்கிறார்.செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருடன் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தொடர்பு இல்லை என்பதுதான் எனது தரப்பில் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள வாதம். மேகாலயா ப்ராஜெக்ட் என அப்படி ஒரு ப்ராஜெக்ட் பற்றி நான் பேசவே இல்லை.
சிங்கப்பூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து ஹவாலா பணம் தனக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் அப்பட்டமான பொய். ர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் ஆய்வு மற்றும் தேர்தல் கருத்துக்கணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை சுமார் 65 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். 2004-ஆம் ஆண்டு முதல் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.
தேர்தல்களுக்கு முன்பாக பல்வேறு அரசியல் கணிப்புகளை வெளியிட்டுள்ளேன்.குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வளர்ச்சி மற்றும் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து ஒரு ஜோதிடர் எப்படி கணிப்பாரோ அப்படி ர்தலுக்கு முன்பே நான் ஆய்வு செய்தேன். மேலும், தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் நான் ரகசியமாக பேசியதோடு, ஜான் ஆரோக்கியசாமி, சரண் ரெட்டி உள்ளிட்டோருடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன்.
இந்த ஆலோசனைகளுக்காக நான் ஒத்த பைசா கூட வாங்கவில்லை என்றும் அந்த நன்றிக்கான பரிசுதான் இந்த வழக்கு என்று குமுறுயிருக்கிறார். காலம் பதில் சொல்லும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். வழக்கு குறித்து இப்போது பேசினால் எனக்குத்தான் பேராபத்து வரும் நாளைக்கு பாதிக்கப்படுவது நானும் என் குடும்பமும்தான்.
சிறையில் 37 நாட்களாக உணவு சரியாக உட்கொள்ள முடியாத நிலையில் படாதபாடுபட்டு வந்தேன். சிறை வாழ்க்கை மிகவும் கொடூரமாக இருந்ததது. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன்.தற்போது முழுமையான விளக்கங்களை அளிக்க வேண்டிய சரியான நேரம் இதுவல்ல என்றும், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின்னர் ஊடகங்களை சந்தித்து அனைத்து விவரங்களையும் ஒன்னவிடாமல் புட்டு புட்டு வைக்கிறேன்.
மேலும், பத்திரிகையாளர்களை சந்திப்பதில் நான் ஓடி ஒளியமாட்டேன் என்று முதல்வர் விஜய்யை திருநாவுக்கரசு நாசுக்காக நசுக்கியிருக்கிறார். உண்மைகள் எப்போதும் ஒளிந்திருக்காது. ஒரு நாள் நிச்சயம் அதை சொல்வதற்கு ஏற்ற காலம் வரும். அந்த காலங்கள் பதில் சொல்லும். அதுவரை பொறுத்துயிருங்கள். நீதி ஒருபோதும் தோற்காது. நிச்சயமாக ஒரு நாள் வெல்லும். அதுவரை பொறுமையாக இருங்கள்” என்று தனது உள்ள காட்டத்தை விஜய்யின் மேல் உள்ள குற்றச்சாம்டை பகீர் வாக்குமூலம் அளித்திருக்கிறார் திருநாவுக்கரசு.



