Drama Artist Petition: வீட்டு மனை பட்டா கேட்டு நூதன நாடகம் நடத்திய கலைஞர்கள்!

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நாடக கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடகம் நடத்தி நூதன முறையில் கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.எங்களுடைய கலைத்துறை மிகவும் நலிவடைந்து வரும் சூழல் உள்ளதால், தங்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நாடக கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 வருவாய் வட்டாரங்களில் ஏராளமான நாடக கலைஞர்கள் வசித்து வருகின்றனர், இந்த நிலையில் நாடக கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் நலிவடைந்து உள்ளதால் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் பகுதியைச் சேர்ந்த நாடக கலைஞர்கள் ஏராளமானோர் இன்று மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்து நூதன முறையில் நாடகம் நடனம் ஆடியபடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.

*மேலும் இதுகுறித்து நாடக கலைஞர்கள் தெரிவிக்கையில்*

எங்களுடைய கலைத்துறை மிகவும் நலிவடைந்து வரும் சூழல் உள்ளதால், தங்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வசனங்களாகக் கூறியவாறு நாடகத்தை நடத்தி தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *