மழை வெள்ளத்தின் போது மேயர் முதல் தூய்மை பணியாளர்கள் வரை இறங்கி வேலை செய்தால்தான் 4 நாட்களில் சென்னையை மீட்க முடிந்தது. சென்னை 4 நாட்களில் இயல்புக்கு திரும்பியது” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றின் சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பில் முடிவுற்ற 13 திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.152.67 கோடி மதிப்பில் 52 புதிய திட்டப் பணிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என் நேரு, தா.மோ அன்பரசன் , சேகர் பாபு , மாநகராட்சி மேயர் பிரியா துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சிங்கார சென்னை உருவாக்கிய முதலமைச்சர் இன்று சிங்கார சென்னை 2.0 திட்டத்தை உருவாக்கி உள்ளார்.
சென்னையில் மக்கள் தொகை என்பது அதிகரித்து வருகிறது இந்த வளர்ச்சி ஏறப்ப சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சியில் குடிநீர் தட்டுபாடு இன்றி கிடைக்கிறது குடிநீர் பிரச்சினை என்பதே இல்லை.
சிங்கார 2.0 திட்டத்திற்கு சென்னை திட்டத்திற்கு 500 கோடி முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். சென்னை மாநகராட்சிக்கான திட்டங்களை முதலமைச்சர் பார்த்துப் பார்த்துச் செய்து வருகிறார்.மழை வெள்ளத்தின்போது தமிழக முதலமைச்சர் அவர்கள் பணியாற்றினார்.
மழைக்கு வெள்ளத்தின்போது மேயர் முதல் தூய்மை பணியாளர்களை இறங்கி வேலை செய்தால் தான் 4 நாட்களில் சென்னையை மீட்க முடிந்தது. சென்னை 4 நாட்களில் இயல்புக்குத் திரும்பியது சென்னையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் மாநகராட்சி ஊழியர்களின் பெயர் எழுதப்படும் எனப் பேசினார்.
பின்னர் பேசிய மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்,அரியர் வரிவசூல் செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது.அரியர் வசூல் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளோம் ஆனால் 6.8 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது அது முற்றிலும் தவறாகத் தகவல் எனப் பேசினார்.

