
மொராக்கோ நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2000 ஐத் தாண்டியது.
3 நாட்கள் துக்கத்தை அறிவித்த மொராக்காவில் நேற்றுக் அதிகாலை, ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கம் உறங்கிக் கொண்டிருந்தவர்களை மீளாத்துயிலில் ஆழ்த்தியது. 2,012 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் மற்றும் 2,059 பேர் காயமடைந்தனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த பூகம்பம் மொராக்கோவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்களை அழித்துவிட்டது, மொராக்கோவின் முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தால் யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்களும் சேதமடைந்துள்ளன.




