
சென்னை மெரினா கடற்கரையில் இருவர் பேசிக் கொண்டிருந்தபோது, ‘நீங்கள் தம்பதியா?’ எனக் கேட்ட காவலர் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் ஒரு பெண் தனது நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ரோந்து பணியில் இருந்த காவலர் ‘நீங்கள் கணவன் மனைவியா?’ எனக் கேட்டு அச்சுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்தைப் பெண் ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் பரவலாகப் பரவிய நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் ராஜ்குமாரை பணியிட மாற்றம் செய்யக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
“பீச்ல இவ்ளோ நேரம் என்ன பண்றீங்க..?” கேள்வி கேட்ட காவலர்.. கொந்தளித்த பெண்#marina #Chennai #thanthitv pic.twitter.com/ce8wVebrYW
— Thanthi TV (@ThanthiTV) February 20, 2025
