M.K. Stalin: அதிமுக. பாஜக மீது கடும் விமர்சனம்!

அதிமுக. பாஜக மீது கடும் விமர்சனம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: எதிர்மறை விமர்சனம் மூலம் எதிரிகளை வீழ்த்துவதை விட நேர்மறை விமர்சனம் மூலம் கட்சியை வளர்ப்பதே சரியானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை செனாய் நகரில் சமூக வலைதள தன்னார்வலர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். நீட் விலக்கு – நம் இலக்கு கையெழுத்து இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பெரியார், அண்ணா, கலைஞர் வகுத்துத் தந்த பாதையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பக்குவப்பட்ட காலத்தில் பிறந்தவன் ஸ்டாலின் என என்னைக் கலைஞர் கூறினார். தமிழர்களைத் தலை நிமிர வைக்கப் பிறந்த இயக்கம்தான் திராவிட இயக்கம், யாருடைய தலையையும் எடுக்கப் பிறந்தது அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக, பாஜக போன்ற வெகுஜன விரோதிகளுடன் தற்போது நாம் மோதிக் கொண்டிருக்கிறோம்.

ஜாதி, மதத்தால் மக்களைப் பிளவுபடுத்துகின்ற கூட்டத்தை எதிர்த்து நாம் மோதிக் கொண்டிருக்கிறோம். பாஜகவின் பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தது அதிமுக. பாஜகவுடன் இருந்தால் முற்றிலும் ஒழிக்கப்படுவோம் என்று பயந்து அதிமுக உள்ளே வெளியே ஆடுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *