Asia cup 2023: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

Advertisements

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது…

6 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.இந்தப் போட்டி தொடரில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பல்லகெலேயில் மோதிய லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டம் ரத்தானதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான “ரிசர்வ் டே” அடுத்த நாளில் நடைபெறும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *