பிரதமர் மோடிக்கு இத்தாலியில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு!

Advertisements

பிரதமர் நரேந்திர மோடி நார்வே நாட்டின் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து விட்டு, இத்தாலி நாட்டிற்கு சென்றடைந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி நார்வே நாட்டின் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து விட்டு, இத்தாலி நாட்டிற்கு சென்றடைந்தார். அப்போது, ரோம் விமான நிலையத்தில் தரங்கிய அவரை இத்தாலி அதிகாரிகள் அரசு மரியாதையுடன் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து, ரோம் நகரில் பிரதமர் மோடி தங்கியுள்ள விடுதியில் இந்தியப் புலம்பெயர் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர், அவர் அங்கு நடைபெற்ற ஒரு கலை மற்றும் இசை நிகழ்ச்சியைப் பார்வையிட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா மற்றும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாட உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தப் பயணம், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி, இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.

மேலும், உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின்  தலைமையகத்திற்கும் தான் செல்ல உள்ளதாகக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *