Advertisements

பிரதமர் மோடி நார்வேயில் நடைபெறும் 3-வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதுடன் இத்தாலியில் போப் ஆண்டவரையும் சந்திக்க உள்ளார்.
உலக நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாடு பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் வருகிற மே 15 முதல் 20-ம் தேதி வரை நெதர்லாந்து, நார்வே, இத்தாலி மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் நார்வே பயணத்தின் போது இந்தியா மற்றும் நார்டிக் நாடுகள் உடனான 3-வது உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் டென் மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து மற்றும் சுவீடன் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். அவர்களுடன் பிரதமர் மோடி பல விஷயங்களை கலந்து ஆலோசிப்பார் என்றும் கூறப்படுகிறது.
இத்தாலி நாட்டுக்கு பிரதமர் மேற்கொள்ள இருக்கும் இந்தப்பயணம், இந்தியாவுக்கான அவரது முதல் தனிப்பட்ட பயணம் ஆகும். இத்தாலியில் வாடிகனுக்கு சென்று போப் ஆண்டவரை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதமரின் பயணத்திட்டத்தின் தொடக்கம் அல்லது இறுதியில், ஐக்கிய அரபு அமீரகமும் கூடுதலாக சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisements



