ராயல் சேலஞ்சர்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்…..!

Advertisements
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 42 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இதில், தேவ்தத் படிகல் 40 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 16 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், மிகவும் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 43 ரன்கள் எடுத்து அசத்தினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *