Advertisements

தமிழ்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போவது இந்தத் தேர்தலின் முடிவுகள் தான் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்தது. வரும் 4-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அரும்பாடு பட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வருவதற்கு, அதிமுக-பாமக கூட்டணி கட்சிகளின் முகவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து வாக்கு எண்ணும் நாளான 4-ம் தேதி எண்ணும் மையத்திற்கு நம் முகவர்கள் சென்று வாக்குச்சாவடியில் பதிவான 17-சி படிவத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையும், வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையும் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் வாக்கு எண்ணிக்கையில் எவரேனும் முறைகேடுகளில் ஈடுபட்டால் உடனடியாக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கையின்போது எந்த சூழலிலும் முகவர்கள் அவர்களின் கடமையிலிருந்து விலகக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போவது இந்தத் தேர்தலின் முடிவுகள் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisements





