வெனிசுலாவில் எந்த விமானமும் பறக்கக் கூடாது – டிரம்ப் எச்சரிக்கை..!

வெனிசுலாவில் எந்த விமானமும் பறக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகை இருந்து வருகிறது. இந்நிலையில், இராணுவ நடவடிக்கைகள் காரணமாக வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில், வான்வெளி மற்றும் அதைச் சுற்றியுள்ள வான்வெளி மூடப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இதனை அனைத்து விமான நிறுவனங்கள், விமானிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் கடத்தல்காரர்கள் ஆகியோர் கவனத்தில் கொள்ளவும் என்றும் கூறி எச்சரிகை விடுத்தார். பின்னர், டிரம்பின் இந்த மிரட்டலுக்கு கண்டனம் தெரிவித்த வெனிசுலா, இது ஒரு காலனித்துவ அச்சுறுத்தல் என்று தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *