Bigg Boss Tamil 7: கமல்ஹாசன் கண்டித்த புரோமோ காட்சி!

Advertisements

பிக்பாஸ் வீட்டில் வாக்குவாதம்! கமல்ஹாசன் கண்டித்த புரோமோ…

பிக்பாஸ் வீட்டில் படிப்புபற்றி ஜோவிகா விஜயகுமாருக்கும், விசித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதற்கு கமல்ஹாசன் கண்டித்த புரோமோ காட்சியை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கடந்த ஒன்றாம் தேதி விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியது. முதல் நாளே போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டனர். இந்தச் சீசனில் இரு பிக்பாஸ் வீடுகள் வைத்து, அதில் போட்டியாளர்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற டாஸ்கில் ஜோவிகாவின் படிப்புகுறித்து பேசப்பட்டது. அப்போது, ஜோவிகாவின் படிப்புகுறித்து விசித்ராவுடன் விவாதம் ஏற்பட்டது. படிப்பு என்பது முக்கியம் என்று வலியுறுத்தி விசித்ரா பேசுவதும், அதற்கு ஜோவிகா, கல்வி, பொது அறிவு முக்கியம் தான். எத்தனை பேர் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்கிறார்.
படிப்பு என்ற விஷியதால் தவறான பாதையில் போறாங்க. அதை மாற்றும் எண்ணத்துக்காக நான் இங்கே வந்தேன். படிச்சா தான் பெரிய ஆளா ஆகனும் இல்லை. படிப்பு எல்லாம் முக்கியமில்லை. படிச்சு தான் பெரிய ஆளாகனும்னு இல்லை என்று பேசி இருந்தார். அப்போது, பிக்பாஸ் வீட்டில் உள்ள சிலர் ஜோவிகா சொன்னது சரிதான் என்ற விதத்தில் கைத்தட்டினர்.

இந்த நிலையில் இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் எபிசோடுக்கான புரோமாவை விஜய் டிவி வெலியிட்டுள்ளது. அதில், ஜோவிகா மற்றும் விசித்ராவின் வாக்குவாதம்குறித்து கமல்ஹாசன் பேசுவது இடம்பெற்றுள்ளது. அதில்,“ ஜோவிகா நீங்கள் எப்போவாது கல்வி முக்கியம் இல்லை என்று சொல்லி இருக்கிறீர்களா.?

விசித்ராவின் கருத்து தவறில்லை. தலைமுறை இடைவெளி ஈடுபட்டுள்ளது. உயிரைக் கொடுத்தாவது கல்வி முக்கியம் இல்லையென நினைப்பவன் நான். குறைகளைச் சொல்லும்போது உடனே ஏற்று கொள்ளும் மனப்பான்மை பலருக்கும் இருக்காது. கற்றல் விதி இருக்கலாமே தவிர, கத்தல் வதை இருக்க கூடாது எனப் பேசியுள்ளார். ஜோவிகாவுக்கு எதிராகக் கமல்ஹாசன் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *