மோடி இன்று மாலை ஐந்து மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஐந்து மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
செப்டம்பர் மூன்றாம் நாள் சரக்கு சேவை வரிக் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

அதன் முடிவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருட்களுக்கு வரிக் குறைப்பையும், சில பொருட்களுக்கு வரி விலக்கையும் அறிவித்தார்.

பீடி, சிகரெட், பான்மசாலா, ஆடம்பர சொகுசுக் கார்கள் ஆகியவற்றுக்கு நாற்பது விழுக்காடாக வரி உயர்த்தப்படுவதாகவும் அறிவித்தார். இந்த வரிச் சீரமைப்பு நவராத்திரித் தொடக்கத்தையொட்டி செப்டம்பர் 22ஆம் நாள் நடைமுறைக்கு வரும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

வரிச்சீரமைப்பு இன்று நள்ளிரவில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் அது குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஐந்து மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *