பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உத்தரபிரதேச தொழிலதிபரை போலீசார் கைது..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த உத்தரபிரதேச  தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷாசாத். இவர் அம்மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் அழகுசாதன பொருட்கள், உடைகள், மசாலா பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இதனிடையே, இவர் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் சென்று அழகுசாதன பொருட்கள், உடைகள் உள்ளிட்டவற்றை பஞ்சாப் எல்லை வழியாக இந்தியாவிற்கு கடத்தி வந்துள்ளார். இந்த கடத்தலின்போது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, பஞ்சாப், உத்தரபிரதேசத்தில் உள்ள ராணுவ தளங்கள் உள்பட முக்கிய இடங்கள் குறித்த உளவு தகவல்களை இவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. க்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், இவரை உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற யூடியூபர் நேற்று கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *