மோடி பிறந்த நாளையொட்டி ஓட்டப் பந்தயம் ..!

சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தைப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தொடக்கி வைத்தார். அதற்குப் பிறகு சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசியுள்ளார்.

அப்போது, பாஜக மாநிலத் துணைத்தலைவரும் சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.இராமலிங்கம், பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலச் செயலாளர் வினோஜ், பிரச்சாரப் பிரிவு மாநிலத் தலைவர் பாண்டியராஜன், தேசியப் பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சேலஞ்சர் துரை ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *