தென்மண்டல வானிலை ஆய்வு மையத்திற்கு முதல் பெண் தலைவர்!

Advertisements

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்படும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்றாகும். இது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வானிலை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த மையம் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டது. தென்னிந்தியாவில், ஐதராபாத், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையின் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாகத்திற்குட்பட்டவை.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று தனது பணியை நிறைவு செய்கிறார். இவருக்குப் பிறகு அமுதா புதிய தலைவராக நியமிக்கப்படுகிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *