FIFA WC 2026 : குரூப் ‘எப்’ பிரிவுக்கான போட்டியில் சுவீடனை வீழ்த்திய நெதர்லாந்து அணி.!

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘எப்’ பிரிவுக்கான போட்டியில் சுவீடனை வீழ்த்தி நெதர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘எப்’ பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சுவீடன் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போட்டியின், 5 மற்றும் 17-ஆவது நிமிடங்களில் நெதர்லாந்து அணியின் பிரையன் பிராப்பியும், 47 மற்றும் 54 ஆவது நிமிடங்களில் காக்போவும் தலா 2 கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *