மகாளய அமாவாசையையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து..!

Advertisements

மகாளய அமாவாசையையொட்டி நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நவராத்திரி விழாவின் தொடக்கமாக அமையும் மகாளய அமாவாசை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி விடுத்துள்ளார்.

அதில், நவராத்திரி விழாக்காலம் அடுத்து வரும் நிலையில் நம் வாழ்வு ஒளி பொருந்தியதாகவும் பயனுள்ளதாகவும் அமையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

வியக்கத்தக்க உடல்நலம், வலிமை, நீடித்த மகிழ்ச்சி ஆகியவற்றை துர்க்காதேவி வழங்கட்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *