மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி : ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா.!

Advertisements

மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான 3 ஆவது, கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 44 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இதில், அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷகிடி சிறப்பாக விளையாடி 102 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 28 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 79 ரன்களும், ஜெய்ஸ்வால் 110 ரன்களும் எடுத்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *