Modi: இந்தியா மீண்டும் பெரிய பொருளாதார நாடாக இருக்கும்!

Advertisements

Narendra Modi | Lok Sabha | LIVE Updates

மீண்டும் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது மிகபெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும் என மக்களவையில் பிரதமர் நரேந்திரமோடி பேசினார்…

மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்.அப்போது பேசிய மோடி மணிப்பூர் விவகாரத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. மக்களவையில் 3 நாட்களாக விவாதங்களைக் கவனித்து வருகிறேன். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கடவுளின் ஆசிர்வாதமாகக் கருதுகிறேன். முக்கிய மசோதாக்கள் கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு அக்கறை இல்லை. இந்திய நாட்டின் இளைஞர்களைப் பற்றி எதிர்க்கட்சிகளுக்குக் கவலை இல்லை. மத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்கள் நாட்டின் வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன.

மக்கள் எங்கள் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்துள்ளனர். 2024-ம் ஆண்டு தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும். எவற்றில் எல்லாம் அரசியல் செய்யக்கூடாதோ அவற்றில் எல்லாம் அரசியல் செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் மீது அக்கறை இல்லை. அதிகாரத்தின் மீதே ஆசை. எதிர்க்கட்சிகள் ‘நோப்பால்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.நாங்கள் சதம் மற்றும் சிக்ஸ் அடித்துக் கொண்டிருக்கிறோம்; ஒருமுறை ‘நோப்பால்’ போட்டால் பரவாயில்லை, நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப ‘நோப்பால்’ போடுகிறார்கள்.காங்கிரசுக்கு கொள்கையும் கிடையாது கோட்ப்பாடும் கிடையாது.2028 இல் எதிர்க்கட்சிகள்நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவார்கள்.மீண்டும் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது மிகபெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்.காங்கிரஸ் கதையை மக்கள் முடித்துவிட்டனர்.பிரிவினை மீதுதான் காங்கிரசுக்கு நம்பிக்கை உண்டு இந்தியா மீது இல்லை. எதிர்க்கட்சிகள் என்னைப் பாராட்டுகிறார்கள்.காங்கிரசின் கதை தமிழகத்தில் முடிந்துவிட்டது.ஒடிசாவிலும் காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி முடிந்துவிட்டது எனப் பிரதமர் மோடி பேசினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *