
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலைகளின் கவசங்களுக்குத் தங்க முலாம் பூசும் செலவை பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர், அந்தப் பணிகளுக்காகக் கவசங்களை அவர் சென்னைக்கு கொண்டு வந்தார். இந்நிலையில், அந்தக் கவசங்களில் சுமார் 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டு சர்ச்சை ஏற்பட்டது.
இந்த வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், உன்னிகிருஷ்ணன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து சபரிமலை முன்னாள் நிர்வாக அதிகாரி பி.முராரி பாபு, சபரிமலை முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமார் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் மற்றும் ஆணையராகவும் இருந்த என்.வாசுவிடம் விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி அதிகாரிகள் அவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஐந்தாவது நபராக தேவசம்போர்டு முன்னாள் தலைவர் பத்ம குமார் என்பவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது.



