சென்னையில் குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னையில் உள்ள பொது இடங்களில், தூய்மையான குடிநீர் வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் கடற்கரை, பஸ் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சந்தைப் பகுதிகள் என மக்கள் கூடும் அதிகமான இடங்களில் குடிநீர் ஏ.டி.எம்.கள் நிறுவப்பட்டுள்ளது.

இந்த குடிநீர் ஏ.டி.எம்களில் 150 மில்லி லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் என இரண்டு அளவுகளில் குடிநீர் பெற்றுக் கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த அதிநவீன நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் முன் வடிகட்டுதல், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மற்றும் புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றைக் கொண்டு தேசிய தரத்திற்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 24 மணி நேரமும் தடையின்றி செயல்படும் வகையிலும்,  நீர்இருப்பு இல்லாத நிலையில் கடவுச்சொல் மூலம் நீரை ரீசார்ஜ் செய்யும் வசதியுடன் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 குடிநீர் ஏ.டி.எம்.களை மெரினா கடற்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *