அமைச்சர் சிவசங்கர் அதிரடி..!

திமுக கூட்டணியில் யாரும், யாருக்கும் அடிமை கிடையாது கூட்டணி கட்சிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர் மோடியா லேடியா என பாஜகவிற்கு சாவல்விட்ட ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை, எடப்பாடி பழனிசாமி இன்று மாற்றிவிட்டார்.
இதனால் பீகாரில் நிதிஷ்குமாருக்கு வந்த நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு வரும் என்று தெரிவித்தார். இதையடுத்து, வேல்முருகன் தேர்தலில்  கேட்ட இடம் கிடைக்கவில்லை என்பதற்காக அவதூறைப் பரப்புகிறார் என்று குற்றம்சாட்டினார்.
திமுக கூட்டணியில் யாரும், யாருக்கும் அடிமை கிடையாது கூட்டணி கட்சிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று தெரிவித்தார். மேலும், மக்களின் கருத்தை உள்வாங்கி, அவர்களின் பிரதிபலிப்பாக உருவாகி வரும் திமுக தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *