
சாம்சங் செல்போன் கடையின் ஷட்டரை உடைத்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, திருட்டு சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணா சிலை அருகே செயல்பட்டு வரும் சாம்சங் செல்போன் கடையின் ஷட்டரை உடைத்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, திருட்டு சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணா சிலை அருகே சாம்சங் செல்போன் கடை செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் சாம்சங் செல்போன் கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர், இன்று காலை அந்த வழியாக சென்ற நபர்கள் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செல்போன் கடை ஊழியர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்,
இதன்பேரில் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்தவுடன் கடையில் வைத்திருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக செல்போன்கள் திருடு போனது தெரியவந்துள்ளது, இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசாருக்கு கடை ஊழியர்கள் அளித்த தகவலின் பெயரில் காவல் துறையினர் கடையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த செல்போன் கடையின் அருகே பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளைக் கொண்டு திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


