
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டும், அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்திட வேண்டியும் அதிமுக சார்பில் கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
ஆரணி அடுத்த சேவூர் இயேசுவின் உதவும் கரங்கள் திருச்சபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலையும் மதிய உணவும் வழங்கப்பட்டன.
மாவட்டச் சிறுபான்மையினர் பிரிவு இணைச் செயலாளர் இயேசுராஜன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும் ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் இராமச்சந்திரன் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலையும் மதிய உணவும் வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட மகளிர் அணித் துணைச் செயலாளர் கலைவாணி, ஒன்றியச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், நகரச் செயலாளர் அசோக்குமார், கிளைச் செயலாளர் பிரபு, ஒன்றிய இணைச் செயலாளர் மஞ்சுளா, தேவாலயப் பாதிரியார் சாலமன் உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.



