TN Governor R. N. Ravi: திடீர் டெல்லி பயணம்.. அரசியல் களத்தில் பரபரப்பு!

Advertisements

4 நாட்கள் பயணமாக டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வரும் 22ம் தேதி டெல்லியிலிருந்து சென்னை திரும்புவாரெனத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்துச் சட்டசபையிலிருந்து வெளியேறினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடப்பு ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை 6 மணிக்குச் சென்னையிலிருந்து விமானம்மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

4 நாட்கள் பயணமாக டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் வரும் 22ம் தேதி டெல்லியிலிருந்து சென்னை திரும்புவாரெனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் திடீர் டெல்லி பயணம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *