
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திருவண்ணாமலையில் மாற்றம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துச் சிறப்புரையாற்றினார்.பின்பு வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த வாழை மரங்களிலிருந்து வாழை குலைகளை போட்டி போட்டுத் தொண்டர்கள் எடுத்துச் சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சோ.காட்டுக்குளம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் திருவண்ணாமலை தொகுதி சி. என். அண்ணாதுரை மற்றும் ஆரணி தொகுதி எம்.எஸ். தரணிவேந்தன் ஆகியோரை ஆதரித்துத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
இதில் இரண்டு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 12 சட்டமன்ற தொகுதியிலிருந்து திமுக கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் முடிந்த பின்பு வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த வாழை மரங்களிலிருந்து வாழை குலைகளை போட்டி போட்டுத் தொண்டர்கள் எடுத்துச் சென்றனர். மேலும் திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூர் சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு மணி நேரமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றனர்.


