வரும் 25ம் தேதி, காட்பாடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்..!

Advertisements

வரும் 25ம் தேதி, காட்பாடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து, ரெயில் மூலம் காட்பாடி செல்கிறார். ரெயில் நிலையத்தில் அவருக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதலமைச்சர் திறந்து வைப்பார் என கூறப்படுகிறது. பின்னர் மாலை 5 மணிக்கு அணைக்கட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலையை திறந்து வைக்கிறார்.

மேலும் அங்கு கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலய கட்டிடத்தையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *