ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு, டிரம்ப் மிகப்பெரிய தவறிழைத்து விட்டதாக ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி காட்டமாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக ஈரானும் போரில் இறங்கிய நிலையில், இரு நாடுகள் இடையேயான போர் தீவிரமடைந்தது.
இச்சூழலில், ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா ‘பி2 ஸ்பிரிட்’ ரக விமானங்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
மேலும் இத்துடன் போரை நிறுத்தாவிட்டால் கடுமையான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று ஈரானை அமெரிக்கா எச்சரித்தது. இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி வெளியிட்டுள்ள பதிவில், எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் எனவும், கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர் எனவும் இஸ்ரேல் மற்றும் அமேரிக்காவை சுட்டிகாட்டி பதிவிட்டுள்ளார்.

