73-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் முதல்வர்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டித் திமுகதொண்டர்களின் வாழ்த்துக்களையும் பரிசுப் பொருட்களையும் பெற்றுக்கொண்டதுடன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் சென்னை மெரினாக் கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி, கருணாநிதி சமாதி ஆகியவற்றில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மாநில அமைச்சர்கள், திமுக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

அதன்பின் திமுக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கு வந்திருந்த தொண்டர்களின் வாழ்த்துக்களையும் பரிசுப் பொருட்களையும் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *