இலங்கைக்கு இன்று 950 டன் நிவாரண பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிவைக்கிறார்..!

Advertisements

இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ அரசு சார்பில் 950 டன் நிவாரண பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அனுப்பி வைக்க உள்ளார்.

இலங்கையில் டிட்வா புயலால் பெய்தத் தொடர் கனமழையினால்  நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில், 485 பேர் உயிரிழந்த நிலையில், 300 க்கும் மேற்பட்டோர் மாயமாகிவுள்ளனர். இந்நிலையில், இலங்கைக்குப் பல்வேறு தரப்பில் நிவாரணங்கள் வழங்கப்படுவதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் மூலம் நிவாரண பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதில், இலங்கை மக்களுக்குத் தமிழக அரசு சார்பில் மொத்தம் 950 டன் நிவாரண பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை, சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை எடுத்து செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *