மத மோதலை ஏற்படுத்தத் திமுக அரசு முயற்சி:அண்ணாமலை

Advertisements

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மத மோதலை ஏற்படுத்தத் திமுக அரசு முயற்சிக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை, கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில்  முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளா்களைச் சந்தித்து பேசினார். அப்போது, அவர் திருப்பரக்குன்றம் விவகாரம் 2014 ஆம் ஆண்டிலேயே பிரச்னைகள் அனைத்தும் முடிந்துவிட்டது என்று அமைச்சா் ரகுபதி பொய்யான கருத்தைத் தெரிவித்திருக்கிறாா். இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்குத் தேவை வளா்ச்சி அரசியலா அல்லது வேறு அரசியலா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். எனவே, அவா் அனைவருக்குமான முதலமைச்சர், நீதிமன்றம் சொல்வதை ஏற்க வேண்டியது தான் அவருடைய முதல் பொறுப்பு ஆனால், அதைப் பின்பற்றவில்லை என்று கூறினார். பின்னர் அவர், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மத மோதலை ஏற்படுத்தத் திமுக அரசு முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார். இந்த சந்திப்பின்போது, பாஜ முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன், பாஜக நிா்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனா்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *