land fraud case:முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்கக் கேரளா விரைந்த தனிப்படை!

Advertisements

சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்கத் தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர். கேரளாவில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதுங்கி உள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் விரைந்தனர்.

ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் 14 நாட்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ளார். கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், போலி சான்றிதழ் கொடுத்து ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தைத் தன்னை மிரட்டிப் பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் நகர போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். இதேபோல், கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று புகார் அளித்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த புகாரில் சிக்கியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவைக் கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *