
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் ‘கன்வர்ஷன் கான்கிளேவ் 2026’ மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் பின்னர், மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, இம்மாநாட்டில் மட்டும் 52 நிறுவனங்களின் திறப்பு விழா நடந்துள்ளது என்றும் தொழில்துறையில் செய்த சாதனைகளை மீண்டும் ஆட்சிக்கு வந்து முறியடிப்போம் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு மட்டும் 41 சதவீதமாக உள்ளது என்றும் முதலீடுகள் செயலாக்க மாநாடு என்பது இந்தியாவில் எங்கும் இல்லாத ஒன்று என்றும் கூறினார். கடந்த ஆண்டு இந்தியாவின் உற்பத்தி திறன் 4.5 சதவீதமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 14.7 சதவீதமாக உள்ளது என்றார். தொடர்ந்து, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழகத்தின் உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டார்.


