TNPL 2026: சேலம் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி.!

Advertisements
 டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள மைதானத்தில் 10ஆவது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் – கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக சச்சின் 77 ரன்களும், அபினவ் கண்ணன் 32 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி  19 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், கோவை அணி 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *