அமைச்சரவையில் விசிக, ஐயூஎம்எல்.. மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கிய ஆ.ராசா.!

Advertisements

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்தாலும், இன்னும் தமிழகத்துல பரபரப்புகள் ஓயுற மாதிரி தெரியல. தேர்தலில் வெற்றி பெற்ற தவெக  தலைவர் விஜய் முதல்வராகி அரியணையில் ஏறிவிட்டார். இத்தனை வருடங்கள் தமிழகத்துல மாறி மாறி ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக காட்சிகள் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளன. தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்று தமிழக அரசியல் வரலாற்றுல தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் , கூட்டணிக் கட்சிகளுடைய ஆதரவுல ஆட்சி அமைச்சாங்க. இந்த நிலையிலதா ,பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில இருந்த காங்கிரஸ், தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியை உடைத்து தங்களுடைய ஆதரவை முழுமையாக தமிழக வெற்றி கழகத்திற்கு வழங்கியது.

எனினும் போதுமான பெரும்பான்மை தவெக – வுக்கு இல்லாமல் இருந்தது. இந்த நிலையிலதா தொடர்ந்து திமுக கூட்டணியில இருந்த விசிக மற்றும் ஐ யூ எம் எல் கட்சிகளும் தங்களுடைய ஆதரவை கடைசி நேரத்தில் தவெக விற்கு அளித்தார்கள். இப்படியான சூழல்ல திமுக தங்களுடைய கூட்டணி பலத்தை முற்றிலும் இழந்தது.ஏற்கனவே முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தமது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தது. இரண்டாவது முறையாகவும் தமது அமைச்சரவையை விரிவு படுத்தியது. இந்த அமைச்சரவியில யார் யார் அமைச்சர்களாக இடம் பெற போறாங்க என்ற எதிர்பார்ப்புகள் பெரிதும் பலருக்கும் இருந்த
நிலையிலதா, விசிகவைச் சேர்ந்த வன்னிஅரசு மற்றும் ஐ யூ எம் எல் கட்சியைத் சேர்ந்த A .M ஷாஜகானும் தமிழக அமைச்சரவையில அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

இவர்கள் அமைச்சர்களாக பதவியேற்றத்தை அடுத்து இதனை கடுமையான மற்றும் ஆபாச வார்த்தைகளால் விமர்சித்து திமுக வினுடைய பொதுச்செயலாளரும், நீலகிரி MP யும்மான ஆ.ராசா தனது X  தள பக்கத்தில ஒரு பதிவை வெளியிட்ருந்தாரு. அந்தப்பதிவுல “முன்‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி – புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!!” என்று பதிவிட்டார். இதை திமுக தொண்டர்கள் பலரும் இந்த பதிவை அதிகம் பகிர்ந்து வந்தனர்.

இந்தப்பதிவு விசிக, ஐ யூ எம் எல் கட்சிகளையும் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய பதிவாக இருக்கிறது என்று பெண்கள் அமைப்பினரும், பல சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்புகள தெரிவிச்சுருக்காங்க. இதையடுத்து ஆ.ராசா அந்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்கியிருக்காரு. சர்ச்சைப்பதிவை நீக்கிய ஆ.ராசா மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார். அந்தப்பதிவுல ” என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை, கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் “முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்” என்று பதிவிட்டுருக்கிறார்.

இந்த சூழல்ல தான் ஆ.ராசா விற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் ஆன
எஸ்.எஸ்.பாலாஜி தனது X தளப் பக்கத்துல “அதிகாரம் எளியவர்க்கு – அதிலென்ன ஆத்திரம்; ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது. அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து – அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்” அப்டினு ஆவேசமாக பதிவிட்ருக்காரு. முன்னதாக திமுக அமைப்புப் பொருளாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தவெக அமைச்சரவையில விசிக இடம்பெறுமா என்று அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.  நாங்கள் இல்லாத அமைச்சரவையில் எவன் இருந்தால் என்ன, எவன் போனால் என்ன. அதைப்பற்றி எங்களுக்குக் கவலையும் இல்லை. அக்கறையும் இல்லை” என்று ஒருமையில் மிகக்கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆ.ராசா வினுடைய இந்த சர்ச்சைப்பதிவை எதிர்த்து திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி தன்னுடைய x தளப் பக்கத்துல அதிகாரம் இழந்த வெறியில் இன்னும் இன்னும் ஆழமாக தனது அசலான அதிகாரவெறி கொண்ட அருவருப்பான தன்மையை நன்றாக பாருங்களேன் என்று தன்னை தானே தோலுரித்து காட்டிக் கொண்டிருக்கிறது அப்டீன்னு தெரிவிச்சுருக்காரு..

ஆ.ராசா வினுடைய இந்த சர்ச்சைக்குரிய பதிவிற்கு இதுதான் சமூக நீதிக்கும்,பெண்ணியத்திற்கும் கொடுக்கும் மரியாதையா? என பல சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும் தங்களுடைய கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *