Weather UAE: வெள்ளத்தில் மிதக்கும் நகரங்கள்.. விமானங்கள் ரத்து!

கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். சென்னையிலிருந்து ஐக்கிய அமீரக நாடுகளுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

துபாயில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை நேற்று ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. இதனால் நகரம் முழுவதும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதே நேரத்தில் சாலைகள் ஆறுகள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. நேற்றைய தினம் மட்டும் 12 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 100 மிமீ மழையும், 24 மணி நேரத்தில் மொத்தம் 160 மிமீ மழையும் பெய்துள்ளது.

சராசரியாக, துபாயில் ஒரு வருடத்தில் 88.9 மிமீ மழையைப் பதிவு செய்துள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக, துபாய் சர்வதேச விமான நிலையம் நீரில் மிதந்து காட்சியளிக்கிறது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்குச் சென்னையிலிருந்து செல்லும் 5 விமானங்களும். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சென்னை வரவேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

துபாயில் கனமழையால் 10 விமானங்களின் சேவை ரத்து

துபாயில் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து துபாய், அபுதாபி செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *