மாநிலங்களவை தேர்தல் அட்டவணை வெளியீடு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

Advertisements

10-மாநிலங்களில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜுன் 18-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத் உட்பட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், சி.வி. சண்முகம், சுனேத்ராபவார் ஆகியோரின் ராஜினாமாவை அடுத்து, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலும் இதே தேதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு ஆண்டுகளைக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நிறைவு செய்தவர்களுக்கு மாற்றாக, புதிய உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் குரியன், ரவ்னீத் சிங் உள்ளிட்ட 24 பேர் அடுத்த மாதம் தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளனர்.

அதன் காரணமாக, புதிதாக 24 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இத தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் 1-ஆம் தேதி தேர்தல் நடைமுறைகள் முறையாக தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 8-ஆம் தேதி எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு ஜூன் 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்றும், அன்று மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். நள்ளிரவுக்குள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தே;ர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *