அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு..!

Advertisements

இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக தான் என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக தான் என்றும் புதிய தேர்தல் அறிக்கை வெளியிடத் தேவையில்லை நிறைவேற்றாத 439 வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம் என்றும் தெரிவித்தார்.

பொய்யிலே வளர்ந்த திமுக  நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்  தொடர்பாக  இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது என்று கூறினார். தேர்தல் வாக்குறுதிகளில் 98 சதவிதம் நிறைவேற்றி விட்டோம், என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும்,  அவரது அமைச்சரவை சகாக்களும் வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறியுள்ளதாக விமர்சித்தார். இதன் பின்னர் நிறைவேற்றப்படாத திமுக வாக்குறுதிகளை பட்டியலிட்டு  கேள்வி எழுப்பினார்.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *