பிரேமலதாவின் கூட்டணி முடிவு : குஸ்பு சொன்னது என்ன தெரியுமா..?

Advertisements

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் , நாம் தமிழர் கட்சி தனித்தும் மற்றும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் இதுவரை யாரும் கூட்டணி சேராமல் தனித்தும் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.

தேமுதிக கட்சி இதுவரை தாங்கள் யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறோம் என்று தெளிவுபடுத்தாத நிலையில இருந்து வந்துகிட்டு இருந்துச்சு. இப்படியிருக்கிற சூழ்நிலையிலதான் இன்னைக்கு திடீரென திமுக தலைவர் ஸ்டாலினை சந்திச்சு தனது ஆதரவை திமுக கூட்டணிக்கு தெரிவிச்சிருக்காங்க பிரேமலதா விஜயகாந்த்.

பரபரப்பான சூழ்நிலையில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி அமைச்சு இருக்கிறது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கு .
பாஜக இடம் பெற்றிருக்கும் அதிமுக கூட்டணியில் தான் பிரேமலதா தேமுதிகவை இணைச்சிக்குவாரு என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில,
திமுகவில் அவர் இணைஞ்சது குறித்து , பாஜகவின் மாநிலத்துணைத்தலைவர் குஷ்பூகிட்ட நிருபர்கள் கேட்டதுக்கு அவர் என்ன சொல்லி இருக்கிறார்னா ,

கேப்டன் விஜயகாந்த் தன் வாழ்நாளில் அறிவாலய வாசலை கூட மிதிக்காதவர். அப்படிப்பட்டவரின் மனைவி யாராவது தங்களது கட்சியை கூட்டணிக்கு அழைக்கமாட்டார்களா என்று காத்திருந்து வேறு வழியில்லாமல் தி.மு.க.வுடன் இணைஞ்சிருக்கார்.
அவரது இந்த முடிவை கேப்டனின் ஆன்மா கூட மன்னிக்காது எனவும்,

தி.மு.க.வை பொறுத்தவரை இந்த முறை தாங்கள் ஜெயிக்கப்போவதில்லை என்பது ஏற்கனவே அவர்களுக்கு தெரிந்துவிட்டது. எனவே யார் வந்தாலும் சேர்த்து கொண்டு கரையேற முயற்சிக்கிறது எனவும் கூறியிருக்கிறாங்க.

அதுமட்டுமில்லாமல் தமிழ் நாட்டு மக்கள் இந்த முறை தெளிவாக இருக்கிறாங்க எனவும் சொல்லி இருக்கிறார்.

மேலும் இந்த முறை  அ.தி.மு.க.- பா.ஜ.க.  கூட்டணி அலையில் சிக்கி தி.மு.க. காணாமல் போகபோவது உறுதின்னும் சொல்லி இருக்கிறாங்க.
அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வெளியே போய்விட்டால் என்ன செய்வது என்ற தவிப்பில் தே.மு.தி.க.வையும் இழுத்து போட்டுள்ளதாகவும் குஷ்பூ கூறியிருக்கிறாங்க.

காங்கிரசுக்கு சூடு, சொரணை, மானம் இருந்தால் தி.மு.க. கூட்டணியை விட்டு எப்போதோ வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது கிடையாது. அதனாலதான் அங்கேயே இருக்கிறராங்கன்னும்,
காமராஜர் காலத்துக்கு பிறகு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலக் கட்டத்திலும் தனியாக நிற்க முயற்சி எடுத்தது கிடையாது. கரைந்து போன அந்த கட்சி இனி எந்த காலத்திலும் தமிழகத்தில் கரையேறப்போவதில்லைன்னும் சொல்லி இருக்கிறாங்க.

எது எப்படியோ தேமுதிகவின் நிலைப்பாடு வெளியாகி விட்டது. அடுத்தது திமுக கூட்டணியில் என்னென்ன செய்யப் போறாங்க, யார் யாருக்கு எவ்வளவு தொகுதி ஒதுக்கப்போறாங்கன்னு, காங்கிரஸ்ஸுடன் நிலவி வரும் சுமூகமற்ற சூழ்நிலைக்கு திமுக தலைமை என்ன முடிவு பண்ணப்போகிறது என்பது பற்றியெல்லாம்  கூடிய விரைவில் தெரியும் என்கிறது மட்டும் நிச்சயமான ஒன்னு .

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *