மகளிர் உலகக் கோப்பை – பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி!

Advertisements
மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பர்மிங்காமில், மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 6 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ஸ்மிரிதி மந்தனா 68 ரன்களும் ஹர்மன்ப்ரீதி கவுர் 36 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *